கோவை, சிங்காநல்லுார் மற்றும் சரவணம்பட்டியில் இயங்கி வருகிறது முத்துாஸ் மருத்துவமனை. கடந்த, 12 ஆண்டுகளாக எலும்பு மூட்டு சிகிச்சையில், 5 லட்சத்திற்கும் மேலான அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளது.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரால் காப்பாற்றியுள்ளனர். மேலும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகளுக்கு, 'தமிழ் ரத்னா 2022' எனும் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களால், முத்துாஸ் மருத்துவமனையின் தலைவர் முத்து சரவணகுமாருக்கு 'மருத்துவ ரத்னா' விருது வழங்கப்பட்டது.
இது குறித்து டாக்டர் முத்து சரவணகுமார் கூறுகையில், ''கடந்த, 12 ஆண்டுகளாக சிறந்த முறையில் மருத்துவ சேவையாற்றி வருகிறோம்.
''குறிப்பாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தனி இடம் பெற்றுள்ளோம். ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம். இதனை அங்கீகரித்து இந்த விருது வழங்கியது எங்களையும், மருத்துவ குழுவினரையும் ஊக்கப்படுத்தும்,'' என்றார்.