''இந்தியாவில் புற்றுநோய் குறித்து அதிகப்படியான டிஜிட்டல் விழிப்புணர்வை கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக,'' புற்றுநோய் சிகிச்சை நிபுணர் குகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குகன் கூறுகையில், '' கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இங்கு, புகையிலைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பெண்களுக்கான கருப்பைவாய் புற்றுநோய், மார்பகப்புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில், 64 மையங்களில் பரிசோதனை, புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறும்படம் வெளியீடு, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக் கையேடு வெளியீடு, புற்றுநோயாளிகளுக்கான பிரத்தேய ஆம்புலன்ஸ் வாகனம், புற்றுநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம், புகைப்பிடிப்பதற்கு எதிரான மொபைல் ஆப் வெளியீடு, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு டிஜிட்டல் 'வெப்சைட்' வெளியீடப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில், இந்தியாவில் புற்றுநோய் குறித்து அதிகப்படியான டிஜிட்டல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.