கோவை:எஸ்.என்.எஸ்., செவிலியர் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் சுப்ரமணியன், தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் துவக்கி வைத்தனர்.
கே.எம்.சி.எச்., செவிலியர் கல்லுாரி முதல்வர் மாதவி பேசுகையில், ''செவிலியர் தொழில் மிகவும் உயர்ந்த தொழில்.
அனைவரும் அதை உணர்ந்து, அன்போடும், பணிவோடும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும்.
தங்கள் துறையில் சிறந்து விளங்க ஒழுக்கம், நேர்மை, தன்னம்பிக்கை, திறனாய்வு சிந்தனை உள்ளிட்ட அடிப்படை பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
எஸ்.என்.எஸ்., தொழில் நுட்ப கல்லுாரி முதல்வர் செந்துார்பாண்டியன், பார்மஸி கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார், செவிலியர் கல்லுாரி முதல்வர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.