கோவை:பீளமேடு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், பில்ட் இன்டெக் 2023 கண்காட்சி நடக்கிறது. இதில், 'பெர்பெக்ட் இன்ப்ரா டெக்' நிறுவனம் சார்பில், 'சரியான விலை மற்றும் நிலையான ஷியர் வால் ஹவுஸ்'கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெர்பெக்ட் இன்ப்ரா டெக் நிறுவன நிர்வாக இயக்குனர் விஜயராகவன் கூறியதாவது:ஷியர் வால் ஹவுஸ் திட்டத்தில் சரியான விலையில், தரமான வீடுகள் கட்டித்தருகிறோம். கட்டுமான பணியும் விரைவில் முடித்து கொடுக்கிறோம். கட்டுமான பணியில் எந்த செங்கற்களும் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், நன்கு வடிவமைக்கப்பட்ட ஒற்றைக்கல் உலோக சட்டமும், வலுவான கான்கிரீட்டும் வீட்டின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. வாடிக்கையாளர்கள் 10 ஆண்டுக்கு எந்தவொரு பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை.
1 பிஎச்கே வீடு ரூ.8 லட்சத்திலும், 750 ச.அடியில் 2 பிஎச்கே வீடு, ரூ.12 லட்சத்திலும், 980 ச.அடியில் 3 பிஎச்கே வீடு ரூ.16லட்சத்திலும் கட்டித்தருகிறோம். மேலும் ரூ.3 லட்சத்தில், 230 ச.அடியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா வீடுகளும், ரூ.5 லட்சத்தில், 350 ச.அடியில், ஸ்டுடியோ வீடுகளும் கட்டித்தருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு, 98433 33434.