வடவள்ளி;பா.ஜ. சார்பில், தைப்பூசத்தை முன்னிட்டு, 'கோவையை காக்க வேண்டி' என்ற பெயரில், பாதயாத்திரையாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர்.
பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில், பா.ஜ.,வினர், நேற்று காலை, புளியகுளம் விநாயகர் கோவிலில் இருந்து பாதயாத்திரை துவங்கினர். பல்வேறு இடங்களில் பா.ஜ.வினர் வரவேற்பு அளித்தனர். நேற்று மாலை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடைந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதில், மாநில துணை தலைவர் கனகசபாபதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.