கோவை:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு கோவையில் தி.மு.க.,- ம.தி.மு.க.,வினர், அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் காந்திபுரம் பஸ்ஸ்டாண்டில் இருக்கும் அண்ணாதுரை உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட துணை பொதுச்செயலாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சட்டத்துறை இணை செயலாளர்கள் தண்டபாணி, அருள்மொழி, தீர்மானக்குழு இணை செயலாளர் நாச்சிமுத்து, பகுதி செயலாளர்கள் கார்த்திக் செல்வராஜ், மனோகரன், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
* ம.தி.மு.க., சார்பில் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அண்ணாதுரை உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமை வகித்தார்.
தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் சேதுபதி, ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் செல்வராஜ், துணை செயலாளர்கள் சற்குணம், துாயமணி, பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை சுந்தராபுரம் அருகே காந்தி நகர் பஸ் ஸ்டாப்பிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, குறிச்சி தெற்கு பகுதி தி.மு.க, செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர், அவைத்தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் உள்பட, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,
போத்தனூர் பகுதி அ.தி.மு.க,,செயலாளர் ரபீக் தலைமையில் கட்சி அலுவலகம், சித்தண்ணபுரத்தில், அண்ணாதுரையின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 99 வது வார்டு செயலாளர் மயில்சாமி, பாலு|, ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.