திருச்சி:-திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் அரசு பள்ளியில் படிக்கும், 14 வயது மாணவியை, அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்யும் சதீஷ்குமார், 40, நான்கு மாதங்களுக்கு முன், பள்ளி கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதே போல, அந்த மாணவியை, பூவாளூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன், 55, என்பவரும் பாலியல் பலாத்காரம்செய்ததால், அவர் மூன்று மாத கர்ப்பமாக உள்ளார்.
மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார் படி, லால்குடி அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் சதீஷ்குமார் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை, கைது செய்தனர்.