மருந்தாளுனர் கொலையில் வாலிபருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சிவகங்கை:சிவகங்கையில் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த தற்காலிக மருந்தாளுனர் தமிழ்செல்வனை 26, கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் அருண்குமாருக்கு 27, ஆயுள்தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை அருகே ஒக்கூர் அழகுஜோதி மகன் அருண்குமார் 27. இவரது தாயார் சிவகங்கை அரசு மருத்துவமனை மருந்தகத்தில் தற்காலிக மருந்தாளுனராக இருந்த சண்முகசுந்தரம் மகன் தமிழ்செல்வத்துடன் 26, கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். பலமுறை அருண்குமார் கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை.

இதில் ஆத்திரமுற்ற அருண்குமார் 2019 ஏப்., 10 ம் தேதி மதியம் 1:00 மணிக்கு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்செல்வத்தை வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்தார். சிவகங்கை போலீசார் வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதிசாய்பிரியா முன் நடந்தது. அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X