சிவகங்கை:சிவகங்கையில் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மருந்தாளுனரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிவகங்கை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சிவகங்கை அருகே ஒக்கூரை சேர்ந்த அழகுஜோதி என்பவர் மகன் அருண்குமார், 27. இவரது தாய் சிவகங்கை அரசு மருத்துவமனை மருந்தகத்தில் தற்காலிக மருந்தாளுனராக இருந்த தமிழ்செல்வம், 26, என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தார்.
பலமுறை அருண்குமார் கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை. ஆத்திரமுற்ற அந்த வாலிபர், 2019ல், அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்செல்வத்தை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
சிவகங்கை போலீசார் வழக்கு பதிந்தனர்.
சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சுமதி சாய்பிரியா, வழக்கை விசாரித்து, அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார்.