சிவகாசி:சிவகாசியில் மகன் இறந்த நினைவு நாளில் தாய், தன் மகளுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி, ரிசர்வ் லைன் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் பாண்டி தேவி, 37. இவர் சித்துராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவரது கணவர் சாலைமுத்து, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மகள் புவனேஸ்வரி, 18; மகன் மகாராஜா, 16, உடன் வசித்து வந்தார்.
மகாராஜா, 2022 ஜன., 3ல் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். புவனேஸ்வரி சிவகாசியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
மகனின் நினைவு நாளை நேற்று அனுசரித்த பின், பாண்டி தேவி மற்றும் புவனேஸ்வரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.