மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் ஊராட்சியில் தமிழக எல்லையான போடிமெட்டு அருகே பி.எல்.ராம் பகுதியில் ஏலத்தோட்டத்தில் ஆண் காட்டு யானை இறந்தது.
அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிகரெட் கொம்பன் என பொதுமக்களால் அழைக்கப்பட்ட எட்டு வயது ஆண் காட்டு யானை ஈஸ்வரன் என்பவரின் ஏலத் தோட்டத்தில் இறந்துகிடந்தது.
தேவிகுளம் வனத்துறை அதிகாரிகள் வெஜி, ஷான்ட்ரிடோம், மூணாறு டி.எப்.ஓ. ரமேஷ்பினோய் அங்கு ஆய்வு நடத்தினர். ஏலத்தோட்டத்தில் மின் கம்பி மிகவும் தாழ்வாக உள்ளதால் அதில் துதிக்கை தட்டி மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கக் கூடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே எரிக்கப்பட்டது.