தொண்டி:''கடலோர பாதுகாப்பில் கவனமாக செயல்பட வேண்டும்,'' என, போலீசாருக்கு, கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, தேவிபட்டினம் மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏ.டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் நேற்று ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
இலங்கை அருகில் இருப்பதால், கடல் பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும். மர்ம நபர்கள் ஊடுருவல், போதைப் பொருள் கடத்தலை தடுப்பது போன்ற கண்காணிப்பு பணியில் தொய்வு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்.
மீனவர்களிடம் கனிவாக பழகி, அவர்களிடமிருந்து அன்னியர்களின் நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கடலோர காவல் படை கமாண்டர் அஜய்குமார் உடன் இருந்தார்.