வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 18ம் ஆண்டு தைப்பூச திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு, முருகனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
இன்று,4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை, 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு வால்பாறை ஓம்சக்தி வழிபாடு மன்றக்குழுவினர் சார்பில், பால்குடம், தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, காலை, 10:00 மணிக்கு அபிேஷக பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, நல்லகாத்து பாலத்திலிருந்து முருகபக்தர்கள், அங்க அலகு பறவைக்காவடி எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைகின்றனர். காலை,11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு அலங்காரத்தேரில் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.