குன்னுார்:குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், 38 லட்சம் ரூபாய் செலவில், பாபு வில்லேஜ், சிங்கார தோப்பு, 'கச்டாபட்டி' கிராமங்களில் முதற்கட்டமாக, 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டம் துவங்கப்பட்டது.
பாபு வில்லேஜில் நடந்த துவக்க விழாவில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் பங்கேற்று துவக்கி வைத்து பேசுகையில், ''இது போன்ற திட்டங்கள் துவக்கி வைத்த பிறகு, ஒரு மாதம் முடிந்ததும், அதனை பாதியில் விட்டு விடாமல், தொடர்ந்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில், செயல்பாடு நீடிக்க வேண்டும்,'' என்றார்.
வாரிய பொறியாளர் சுரேஷ்குமார், திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி முகமது அலி, நியமன உறுப்பினர் ஷீபா உட்பட பலர் பங்கேற்றனர்.