தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் முலையம்மை சமேத மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் தைப்பூச பெருவிழா ஜன., 26 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் யானை, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு 500 டன் எடையுள்ள பிரமாண்ட தேரில் மலர் அலங்காரத்தில் மகாலிங்க சுவாமி எழுந்தருளினார்.
காலை 9:00 மணிக்கு மேல் விநாயகர் சுப்பிரமணியர், மகாலிங்க சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகளின் தேரோட்டம் நடந்தது.