பந்தலுார்;பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களில் வெள்ளை நிறத்தில் பூத்துள்ள பூக்கள், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக, காபி விவசாயத்தில் பல விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் காபி வாரிய அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், கூடலுார் பகுதியில் இதன் அலுவலகம் செயல்பட்டு வருவதுடன், காபி விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த சாரல் மழையால், காபி தோட்டங்களில் வெள்ளை பூக்கள் பூத்து நறுமணம் வீசி வருகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்தால் மட்டுமே, பூக்கள் காயாக மாறி விவசாயிகளுக்கு பயன் தரும். இல்லாவிட்டால் பூக்கள் காட்சிக்காக மட்டும் பயன்படும்.