கூடலுார்:கூடலுார் தேவாலா பகுதியில், மழை வெள்ளம் குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டங்களில் நுழைவதை தடுக்க, ஆற்றை துார் வாரும் பணி துவக்கப்பட்டது.
கூடலுார் தேவாலா ஆறு, புளியம்பாறை வழியாக சென்று, பாண்டியார் -புன்னம்புழா ஆற்றில் கலக்கிறது.
பருவ மழையின் போது, ஆற்றில் ஏற்படும் மழை வெள்ளம், விவசாய தோட்டங்கள், குடியிருப்புகளில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தடுக்க நீர்வளத்துறை சார்பில், 3.5 கி.மீ., துாரம் ஆற்றை, பொக்லைன் உதவியுடன் துார்வாரி சீரமைக்க பணி துவங்கியுள்ளனர்.
இதனை வரவேற்றுள்ள மக்கள்,'ஆற்றின் வழித்தடத்தை முழுமையாக, சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி அகலப்படுத்த வேண்டும்,' என்றனர்.