உடுமலை:அரசு பள்ளிகளில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. முன்னதாக, தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார்.
தொடர்ந்து, தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களை அன்புடன் அரவணைப்பதன் வாயிலாக அவர்கள் சீரான மனநிலையிலும், இயல்பாக வாழ்வதற்கும் அடிப்படையாக அமையும்.
இன்றைய மருத்துவ வளர்ச்சியில் நோய் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளும் போது, நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதுடன், எளிதில் குணப்படுத்து முடியும்.
தொழுநோய் உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என, விளக்கப்பட்டது.மேலும், தொழுநோய் அறிகுறிகள், பரவும் விதம், பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.