வால்பாறை:முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 54வது நினைவு நாள், வால்பாறையில் தி.மு.க., சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. நகர செயலாளர் சுதாகர் தலைமையில் கட்சியினர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி தலைமை வகித்து, அண்ணாதுரை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
துணை தலைவர் அபுதாஹிர், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.