பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, நபார்டு மற்றும் கிராம சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 3.5 கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்படவுள்ளன.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், சி.கோபாலபுரத்தில் இருந்து தேவம்பாடிவலசு செல்லும் ரோடு, 4.15 கி.மீ., துாரம் கொண்டது. இந்த வழித்தடத்தில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த வழித்தடம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருப்பதால், பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமப்படுகின்றனர்.
இந்த ரோடு, ஜமீன் முத்துார் --- நல்லிக்கவுண்டன்பாளையம் ரோடு வழியாக, பொள்ளாச்சி -- பாலக்காடு ரோட்டை இணைக்கும் முக்கிய ரோடாக இருப்பதால், இைத சீரமைக்க, பலதரப்பில் இருந்தும், கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு சார்பில், 3.5 கோடி ரூபாய் மதிப்பில், இந்த ரோட்டை புதுப்பிக்க, கடந்த, 20ம் தேதி டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டரை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
இப்பணிகளை விரைவில் முடிந்து, ரோடு சீரமைக்கும் பணிகள் துவங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.