புதிய ரோடு வேண்டும்
காணப்பாடி கால்நடை மருந்தகத்திற்கு செல்லும் ரோடு ஜல்லி ரோடாக இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. புதிய ரோடு அமைத்து தர வேண்டும்
- கந்தசாமி, மண்டையக்கவுண்டனுார்
நடவடிக்கை எடுக்கப்படும்
விரைவில் ரோடுகள் சரிசெய்யப்பட்டு புதிய ரோடுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்
- மோகன், ஒன்றிய கவுன்சிலர், காணப்பாடி
சாக்கடை துார்வார வேண்டும்
பழநி சண்முகபுரம் பகுதியில் சாக்கடை துார்வாரப்படாமல் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்தொற்று அபாயம் உள்ளது.
-இளங்கோவன், லயன்ஸ் கிளப் ரோடு, பழநி
விரைவில் பணி
சாக்கடைகளை சீரமைப்பு பணி விரைவில் நடக்கும்.
மீனாட்சிதேவி, 16வது வார்டு கவுன்சிலர்
சீரமைக்க வேண்டும்
கண்ணாபட்டியிலிருந்து மீளாங்கண்ணிபட்டி செல்லும் ரோடு மழையால் சேதமடைந்து பள்ளங்களாக உள்ளது. சீரமைக்க வேண்டும்.
- ராஜேந்திரன், மீளாங்கண்ணிப்பட்டி
விரைவில் நடவடிக்கை
சேதமடைந்த ரோடுகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாகராஜன், ஊராட்சி தலைவர், விராலிப்பட்டி.
குப்பையை அகற்றுங்க
வேடசந்துார் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில் பட்டியில் பல இடங்கள் குப்பை மேடாகி உள்ளது.குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆண்டவர், பெருமாள்கோவில்பட்டி
விரைவில் அகற்றப்படும்
விரைவில் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை பாயும்.
கவுசல்யா, ஒன்றிய கவுன்சிலர்.
தெருவிளக்குகள் வேண்டும்
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானா நாகணம்பட்டி செல்லும் ரோட்டில் போதிய தெருவிளக்குகள் இன்றி கடும் இருள் நிலவுகிறது. தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
- சீனிவாசன், ஒட்டன்சத்திரம்
நடவடிக்கை எடுக்கப்படும்
கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க நட வடிக்கை விரைந்து எடுக்கப்படும்.
திருமலைச்சாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம்
காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டும்
சின்னாளபட்டி பேரூராட்சி மேட்டுப்பட்டி மயானத்தில் கழிவுகளை கொட்டி தீ வைத்து செல்வதால் புகை மூட்டமாகி காற்று மாசடைகிறது.
- குழந்தைவேல், சின்னாளபட்டி
கழிவுகளை கொட்டபுதிய இடம்
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை பிரிவில் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்கப்படும். கழிவுகளை கொட்டுவதற்கு புதிய இடம் அமைக்கப்படும்.
நிழற்குடை சேதம்
கே.சி.பட்டி நிழற்குடை மிகவும் சேதமடைந்துள்ளது. விரைந்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், கே.சி.பட்டி
விரைவில் தொடங்கும்
விரைவில் சீரமைப்பு பணி தொடங்கும்.
ஜீவா, ஊராட்சி தலைவர், கே.சி.பட்டி