கொசு தொல்லையால் அவதி
லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் உள்ள புதுப்பேட்டை கிரின் கார்டனில் கொசுதொல்லை அதிகமாக உள்ளது.
ராதா, புதுப்பேட்டை.
தெருவிளக்கு எரியவில்லை
புதுச்சேரி, செல்லபெருமாள்பேட்டை, ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில்கடந்த ஆறு மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை.
நடராஜன், செல்லபெருமாள்பேட்டை.
பாதாள சாக்கடை மூடியால் ஆபத்து
புதுச்சேரி, அண்ணா சாலை, ஆயில் மில் வீதியில் பாதாள சாக்கடை மேல்மூடி சேதமடைந்து ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ளது.
ராஜன், புதுச்சேரி.
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
முத்தியால்பேட்டை, சோலை நகரில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
தசரதன், சோலை நகர்.
புதுச்சேரி, பிப். 4-
புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், நீர் திருவிழா அலியான்ஸ் பிரான்சேவெல் கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
அலியான்ஸ் பிரான்ஸே தலைவர் சதிஷ் நல்லாம் வரவேற்றார். புதுச்சேரி உதவி பிரெஞ்சு துாதர் கார்லே ஜோசக் தலைமை தாங்கினார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, சிறந்த புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்களை பார்வையிட்டார்.
பின் நீர்நிலைகள் காக்கும் தன்னார்வாலர்களுக்கு நீர் நிரப்பட்ட குடங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரகுநாத் நன்றி கூறினார்.