கடலுார் : கடலுார் எஸ்.பி., சக்திகணேசன் மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி.,யாக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலுார் மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த சக்திகணேசன், சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், கொளத்துார் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த ராஜாராம் கடலுார் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஏற்கனவே, 2014 முதல் ஒன்றரை ஆண்டுகள் சிதம்பரம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்தார். பின்னர் ஏ.டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.