செஞ்சி : செஞ்சியில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது மயக்கப்பொடி துாவி, நகைகளை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெருங்காப்பூரைச் சேர்ந்தவர் முத்தன் மகன் முருகன், 45; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, நண்பரை சந்திக்க செஞ்சியில் இருந்து பொன்பத்தி கிராமத்திற்கு நடந்து சென்றார்.
சக்கராபுரம் பூங்கா அருகே சென்ற போது, அங்கு வந்த 40 மற்றும் 60 வயதுடைய இரண்டு நபர்கள் முருகனிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்களில் ஒருவர் ஏதோ பொடியை திடீரென முருகன் மீது துாவினார். இதில் முருகன் மயக்கமடைந்தார்.
சிறிது நேரத்திற்கு பிறகு கண் விழித்து பார்த்த போது, முருகன் கைவிரலில் அணிந்திருந்த 2 கிராம் மோதிரங்கள் இரண்டு, 4 கிராம் மோதிரம் ஒன்றையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.