கரூர்: கரூர் அருகே ராயனுார் பகுதியில், சாக்கடை வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை வாய்க்காலில், செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது.
மேலும், மழை பெய்யும் போது, சாலையில் கழிவுநீருடன், மழை நீரும் சேர்ந்து செல்கிறது. அப்போது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கழிவு தேங்குவதால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, வாய்க்காலை தூர்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை உடனடியாக அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.