ஈரோடு தொகுதிக்கு பல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் முனைப்புடன் உள்ளார். சாயக்கழிவு நீரை, மாநகரத்தில் இருந்து அப்புறப்படுத்தி, ஜவுளி சார்ந்த தொழில், விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படாமல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவோம். மிகப்பெரிய வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
'அ.தி.மு.க., வேட்பாளர், 7ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கலை ஒத்தி வைத்துள்ளார். அ.தி.மு.க.,வின் இருதரப்பை அண்ணாமலை சமரசம் செய்து வைக்க முயல்கிறார். ஈரோடு கிழக்கில், 30 ஆயிரம் வாக்காளர் இடம் பெயர்ந்தவர்கள், போலி நபர்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?' என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த இளங்கோவன், ''மனுத்தாக்கல், ௭ம் தேதியுடன் முடிவடைகிறது. 8ம் தேதி அவர்கள் வந்து என்ன செய்ய போகிறார்கள் என எனக்கு தெரியவில்லை. ஈரோட்டில் குடிபெயர்ந்தவர்கள் பற்றி எனக்கு தெரியவில்லை.
வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் மீண்டும், மீண்டும் சரி பார்த்து பட்டியலை வெளியிட்டுள்ளது. அண்ணாமலை மிகப்பெரிய மனிதர். நான் சிறிய மனிதன். அண்ணாமலையின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது,'' என்றார்.