ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மனுத்தாக்கல் கடந்த, 31ம் தேதி தொடங்கியது. வரும், 7ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். மாநகராட்சி பிரதான கட்டடத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், மனுக்களை பெற்று வருகிறார்.
கடந்த, 31ல், 4 பேர்; 1ம் தேதி 6 பேர்; 2ம் தேதி ௧0 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று காங்., வேட்பாளர் இளங்கோவன், அ.ம.மு.க., மற்றும் அ.தி.மு.க., பன்னீர் அணி வேட்பாளர், மாற்று வேட்பாளர், சுயேட்சைகள் என, 16 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதனால் மொத்த மனு எண்ணிக்கை, 39 ஆக உயர்ந்தது.
சுயேட்சை வேட்பாளர் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் மனுத்தாக்கல் டெபாசிட் தொகையான, 10 ஆயிரம் ரூபாயை, 1,4௦௦ இரண்டு ரூபாய் நாணயம், ௧,௪௦௦ ஐந்து ரூபாய் நாணயமாக செலுத்தினார். இதை எண்ணி சரிபார்க்கும் பணியில், மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலர், பிற பணியாளர் என, 10 பேர் ஈடுபட்டனர்.