ஈரோடு: ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
காலை, 9:30 மணிக்கு, பரிவார கோவில் தெய்வங்கள், விமான கோபுரங்கள் மற்றும் மூலவர் கஸ்துாரி அரங்கநாத பெருமாள், கமலவல்லி தாயார், மூலவர் விமானம், ராஜகோபுரத்துக்கு பட்டாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இதை தொடர்ந்து திருவாராதனம், மகா தீபாராதனை, பெரிய சாற்றுமறை, மகா ஆசீர்வாதம் நடந்தது. மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. அதன்பின் திவ்ய தம்பதிகள் திருவீதி உலா நடந்தது. விமரிசையாக நடந்த கும்பாபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.