சென்னிமலை: சென்னிமலை டவுன் ஐயப்பா நகரில் பழமையான ஐயப்பன் கோவிலில், திருப்பணி வேலை முடிந்து மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக பிப்.,1ம் தேதி காலை கும்பாபிஷேக விழா தொடங்கியது.
2ம் தேதி இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜை, பூர்ணாகுதி, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை, வேத சிவாகம பாராயணம், ரக்க்ஷா பந்தனம், நாடி சந்தானம், மஹா பூர்ணாகுதி, மஹா தீபாராதனை, கலசங்கள் ஆலயம் வலத்தை தொடர்ந்து, காலை, 8:30 மணி ஐயப்ப சுவாமி, பாலமுருகன் ஆலய விமானங்கள் மற்றும் மூலாலய மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.