தொடர்ந்து, தி.மு.க., யூனியன் கவுன்சிலர் லதாவேலுசாமி, அ.தி.மு.க.,வில் இணைந்து கொண்டார். தற்போது தி.மு.க.,வின் பலம், 11 ஆகவும், அ.தி.மு.க., கூட்டணி பலம் நான்காகவும் உள்ளது. நேற்று மதியம், குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பாதேவியிடம், தி.மு.க., கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தோகைமலை யூனியன் குழு தலைவரின் கணவரும், அ.தி.மு.க., தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான ரங்கசாமி அரசு பணிகளில், தலையிட்டு வருகிறார். பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும், அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்.
இதை தட்டி கேட்கும் யூனியன் கவுன்சிலர்களை ஆட்களை வைத்து மிரட்டுகிறார். எனவே, தோகைமலை ஒன்றிய குழு தலைவர் லதா ரங்கசாமியை பதவியில் இருந்து நீக்க, வரும் யூனியன் குழு கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். அதை பெற்றுக் கொண்ட, ஆர்.டி.ஓ., 'உரிய விசாரணை செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறினார்.