கரூர்: 'க.பரமத்தி பஞ்சாயத்து யூனியனை, இரண்டாக பிரித்து, சின்னதாராபுரம் பெயரில் தனி யூனியனை ஏற்படுத்த வேண்டும்' என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், எட்டு பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. அதில், 30 கிராம பஞ்சாயத் துக்களை கொண்ட, பெரிய பஞ்சாயத்து யூனியனாக, க.பரமத்தி செயல்பட்டு வருகிறது.
க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்து வடக்கே, 14 கிலோ மீட்டர் துாரத்தில் நொய்யலும், தெற்கே, 25 கிலோ மீட்டர் துாரத்தில் ராஜபுரமும், கிழக்கே, 10 கிலோ மீட்டர் துாரத்தில் தண்ணீர்பந்தலும், மேற்கே, 20 கிலோ மீட்டர் துாரத்தில் வைரமடையும் எல்லைகளாக உள்ளன.
அதில், இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 30 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும், 246 வார்டு உறுப்பினர்கள், கடந்த, 2019 ல் நடந்த ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாயத்து யூனியன் மூலம், செயல்படுத்தப் படும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பசுமை வீடு திட்டம், சிமெண்ட் தேவை மற்றும் குடிநீர் பிரச்சனைக்காக, மக்கள் பிரதி நிதிகள் மற்றும் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் துாரம் உள்ள, க.பரமத்தி பஞ்சாயத்து யூனி யன் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், யூனியன் அதிகாரி களை சந்திக்க, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், சில சமயங்களில் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல் கின்றனர்.
இதனால், வளர்ச்சி திட்டங்கள் எளிதில் சென்றடையவும், நிர்வாக வசதிக்காகவும், சின்னதாராபுரத்தை தலைமை யிடமாக கொண்டு, 15 பஞ்சாயத்துக்கள் அடங்கிய, புதிய பஞ்சாயத்து யூனியனை உருவாக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.