சேலம்: சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டி, 4 வயது பேத்தியை கொன்ற பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கூச்சலிட்டு அழைத்தும் திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, குழந்தைகள் மயங்கிய நிலையில் கிடந்தன. அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மதுகிருத்திகா உயிரிழந்தார். ஆண் குழந்தை உயிருடன் இருந்தது.
சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா விசாரித்தார். அதில், 6 மாதங்களாக சாந்தி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரிந்தது. அவர் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என, செவ்வாய்ப்பேட்டை போலீசார் தெரிவித்தனர். சாந்தி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.