சேலம்: சேலம், திருமலைகிரியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு பட்டியலின மக்கள் கோவில் வெளியே நின்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த, 26ல் பட்டியல் பிரிவை சேர்ந்த பிரவீன்குமார், 23, கோவில் உள்ளே சென்று அம்மனை வழிபட்டார்.
நேற்று மதியம், 12:45 மணிக்கு கோவில் நடையை பூசாரிகள், அதிகாரிகள் முன்னிலையில் திறந்தனர். பின் பூஜை செய்து அனைத்து சமூகத்தினர் பொது வழிபாட்டில் அம்மனை தரிசனம் செய்தனர். இனி பூசாரி, அறநிலையத்துறையிடம் சாவி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அறநிலையத்துறை சேலம் உதவி கமிஷனர் ராஜா, மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், உதவி கமிஷனர் ஆனந்தி, கோவில் செயல் அலுவலர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.