கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரத்தில் மஞ்சமேடு, அக்ரஹராம், கடைவீதி, மாரியம்மன் கோவில் சாலை ஆகிய இடங்களில் கொசுத்தொல்லை இருந்தது. இதனால் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது. ஆங்காங்கே இருந்த குப்பையும் அகற்றப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் குடிநீரை மூடி வைத்தல், மருந்து தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகளை, துாய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர்.