கொடுங்கையூர், சென்னை, கொடுங்கையூர், எம்.ஆர்.நகரில் 'பேங்க் ஆப் இந்தியா' வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல, வங்கியில் ஊழியர்கள் அலுவலக பணியில் ஈடுபட்டிருந்தனர். முற்பகல் 11:00 மணியளவில், திடீரென மின் தடை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, 'இன்வெட்டர்' இயங்கி செயல்பட்டது.சில நிமிடங்களில், இன்வெட்டர் அறையில் இருந்து பயங்கர சத்தத்துடன் திடீரென கரும்பு புகை வெளியேறியது.
இதனால் வங்கியில் இருந்த ஊழியர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் அலுவலகத்தில் இருந்து ஓடினர்.
சாலையில் அனைவரும் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து, வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், உயர் நீதிமன்றம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து, உதவி மாவட்ட அலுவலர் சூரிய பிரகாஷ் தலைமையில், நான்கு வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், 40 இன்வெர்ட்டர்கள் தீயில் கருகி நாசமாயின.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தீயணைப்பு வீரர்கள், உரிய நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்டவை தப்பின.