துரைப்பாக்கம், துரைப்பாக்கம், குமரகுரு அவென்யூவில், முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரோந்து பணியில் இருந்த, துரைப்பாக்கம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் தணிகைவேல், 40, சம்பவ இடத்திற்கு சென்றார். முதியவரை வீட்டுக்கு செல்ல வலியுறுத்தினார்.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், பிடித்து இழுத்த தணிகைவேல் கையை, போதை முதியவர் கடித்தார்.
உடனே, வேறு போலீசாரை வரவழைத்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராசையா, 68, என தெரிந்தது.
நேற்று, அவரை காவல் நிலையம் வரவழைத்த போலீசார், எச்சரிக்கை செய்து எழுதி வாங்கி அனுப்பினர்.