டி.பி.சத்திரம், சென்னை, டி.பி.சத்திரம், நியூ ஆவடி சாலை பகுதியில், நேற்று முன்தினம் இரவு, இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர், அரிவாளுடன் வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தினர்.
தகவல் அறிந்த டி.பி.சத்திரம் போலீசார், மூன்று பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கொரட்டூரைச் சேர்ந்த கணேசன், 26, தலைமை செயலக காலனியைச் சேர்ந்த முகேஷ் குமார், 20, ரெட்டேரியைச் சேர்ந்த அஜித் குமார், 35, என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எதிரியை தீர்த்துக்கட்டுவதற்கு அரிவாளுடன் வலம் வந்தது விசாரணையில் தெரிய வந்தது.