கொடுங்கையூர், கொடுங்கையூர், சந்திரசேகர் நகரைச் சேர்ந்தவர் குமார், 50. இவர், அதே பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார்.
கொடுங்கையூர், திருவள்ளூர் லிங்க் சாலை வழியாக நேற்று நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த மூவர் கத்தி முனையில் மிரட்டி, 1,000 ரூபாயை பறித்து சென்றனர்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.
இதில், கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 19, விக்னேஷ், 19, யுவராஜ், 26, ஆகியோர், வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.