சென்னை, சென்னை, முடிச்சூரைச் சேர்ந்தவர் செந்தில், 39, அண்ணா நகரை சேர்ந்தவர் ஜோசப், 22, பள்ளிக்கரணையை சேர்ந்தவர் அருண்குமார், 42.
மேலும், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ரம்யா 35, சசிகலா, 63, கொருக்குப்பேட்டையை சேர்ந்த சங்கர், 27, பெரியமேட்டை சேர்ந்த சூர்யா, 24, ஆகிய ஏழு பேரும், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, ஏழு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்தாண்டில் இதுவரை 32 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட எட்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.