சென்னை, எஸ்.யு.வி., கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை, ஜே.கே.டயர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான ஜே.கே.டயர்ஸ், டயர் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில், முன்னணியில் உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, எஸ்.யு.வி., வகை கார்களுக்கு ரேஞ்சர் ஹெச்.பி.இ., ரேஞ்சர் எக்ஸ்.ஏ.டி., என்ற புதிய டயர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இரு டயர்களும், இந்திய சாலைகளுக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களின் தேவைகளை கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக, 'ஜே.கே.டயர்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா' நிறுவனத்தின் தலைவர் அனுஜ் கதுரியா தெரிவித்துள்ளார்.
இது, நிறுவனத்தின் இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும், அவர் தெரிவித்தார்.
ஜே.கே.டயர்ஸ் நிறுவனத்தினர் கூறியதாவது:
சாகசங்களில் ஆர்வம் கொண்டோருக்காக, மேம்பட்ட தொழில்நுட்பத்தில், உயர் செயல்திறனுடன், அதிவேகத்தில் பாதுகாப்பாக செல்லும் வகையில், இந்த டயர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த டயர்கள் பொருத்தப்பட்ட கார்களை ஓட்டும்போது, சிறந்த அனுபவம் கிடைக்கும். உலகளாவிய 'ஆட்டோமொபைல்' உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில், டயர் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.