சென்னை, சென்னை, மயிலாப்பூர், ரசிக ரஞ்சனி சபாவில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் மற்றும் நாடக காவலர், செம்மல் ஆர்.எஸ்.மனோகர் அடுத்த தலைமுறையினர் சார்பில், 'அருட் பிரகாச வள்ளலார்' நாடகம், இன்று காலை 10:30 மணிக்கு அரங்கேற்றப்படுகிறது.
இந்நாடகத்தை, மறைந்த ஆர்.எஸ்.மனோகரின் அடுத்த தலைமுறைகளான சிவபிரசாத் மற்றும் ஸ்ருதி இயக்கியுள்ளனர். நாடகத்தை, டாக்டர் அறிவானந்தம் எழுதியுள்ளார்.
வள்ளலாரின் மறைவு தினத்தை முன்னிட்டு இந்நாடகம் அரங்கேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதில் சிவபிரசாத், சாய்சுதன், சேதுராமன், ஆதித்யா, மோனிஷ், ஜான்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குகபிரசாத் இசையமைத்து, பின்னணி பாடியுள்ளார்.