கிருஷ்ணகிரி:கள்ளக்காதலை மனைவி கைவிடாததால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார். வேலுாரில் பதுங்கிய கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மணிமாடிகொட்டாயைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 51, விவசாயி; இவரது மனைவி பழனி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, 40, என்பவருக்கும், ஒன்றரை ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்தது.
இதை கணவன் கண்டிக்கவே, கோபித்துக் கொண்ட பழனி, போத்தாபுரத்திலுள்ள தாய் வீட்டுக்கு இரு மாதங்களுக்கு முன் சென்றார்.
சமாதானப்படுத்தி மனைவியை அழைத்து வர வெங்கடேசன் சென்ற போது, முத்துசாமியுடன், பழனி இருந்தார். இதைக் கண்டித்த வெங்கடேசனை, இருவரும் சேர்ந்து தாக்கினர்.
இது குறித்து, காவேரிப்பட்டணம் போலீசில் அவர் புகார் அளித்தார். முத்துசாமியை போலீசார் அழைத்து கண்டித்தும், பழனியுடனான கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை.
இதனால் மனமுடைந்த வெங்கடேசன், கடந்த, 1ல் விஷம் குடித்தார்.
ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சடலத்தை வாங்க மறுத்தும், முத்துசாமியை கைது செய்ய வலியுறுத்தியும், காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனை, வெங்கடேசனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, வேலுாரில் பதுங்கியிருந்த முத்துசாமியை, காவேரிப்பட்டணம் போலீசார், நேற்று கைது செய்தனர்.