ஆத்துார்:கடலுார் மாவட்டம், வேப்பூர், மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32. பெங்களூரில் தச்சு தொழில் செய்கிறார்.
இவரது மனைவி இளஞ்சியம், 30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
மணிகண்டனை பார்க்க அவரது தாய் அஞ்சலி, 55; இளஞ்சியம், குழந்தைகள் ஆகியோர், கூத்தக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காரைக்கால் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணம் செய்தனர்.
மதியம், 1:00 மணிக்கு, ஆத்துார், புதுப்பேட்டைக்கு ரயில் வந்தபோது, மர்ம நபர்கள், ரயில் மீது கற்களை வீசியுள்ளனர். அஞ்சலி மீது கல் விழுந்ததில், மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
ஆத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய அவர்களை, ரயில்வே போலீசார் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரயில் மீது கற்கள் வீசிய மர்ம நபர்கள் குறித்து, சேலம் ரயில்வே போலீசார், ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.