ஓசூர்:தேன்கனிக்கோட்டை அருகே மான் வேட்டையாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவில், தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், கூச்சுவாடி கிராமத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, அத்திமரத்துபள்ளத்தைச் சேர்ந்த கெம்பன், 36; சந்திரன், 35; மாதேஷ், 35, ஆகியோர், குடியூர் வனப்பகுதியில் மானை வேட்டையாடி, இறைச்சியை பங்கு போட்டது தெரிந்தது. தலை மற்றும் கால்களை, சந்திரன் நிலத்தில் புதைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களை கைது செய்த வனத்துறையினர், மூவருக்கும் தலா, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.