The sweet queen of the music nation... Vani who made the voice an art... | இசை தேசத்தின் இனிய ராணி... குரலை கலையாக்கிய வாணி... | சென்னை செய்திகள் | Dinamalar
இசை தேசத்தின் இனிய ராணி... குரலை கலையாக்கிய வாணி...
Added : பிப் 05, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
 
The sweet queen of the music nation... Vani who made the voice an art...   இசை தேசத்தின் இனிய ராணி...         குரலை கலையாக்கிய வாணி...



1945 - 2023




பெயர் : வாணி ஜெயராம் (78)
இயற்பெயர் : கலைவாணி
பிறப்பு : 30.11.1945, வேலுார்
பெற்றோர் : துரைச்சாமி ஐயங்கார் - பத்மாவதி
மறைவு : 4.2.2023

இசை உலகில் 50 ஆண்டுகள் கொடிகட்டி பறந்தவர் வாணி ஜெயராம். இசை குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு ஐந்து சகோதரி, மூன்று சகோதரர்கள். சிறுமியாக இருந்தபோது தாயார் பத்மாவதி இவரை 'ரங்கராமானு ஐயங்காரிடம் வாய்ப்பாட்டு பயிற்சிக்காக சேர்த்து விட அவரிடம் முத்துசாமி தீக் ஷிதரின் கீர்த்தனைகளை கற்றறிந்தார்.

பின் கர்நாடக இசையை கடலுார் ஸ்ரீனிவாச ஐயங்கார், டிஆர் பாலசுப்ரமணியம், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்தார். 8 வயதில் அகில இந்திய வானொலியில் முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார் வாணி ஜெயராம்.சென்னை ராணி மேரி கல்லுாரியில் படித்து பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். 1967ல் ஐதராபாத் கிளைக்கு மாறினார். 1969ல் ஜெயராமை திருமணம் செய்த பின் மும்பைக்கு குடி பெயர்ந்தார்.

மனைவியின் இசை புலமையை அறிந்த ஜெயராம், அவரை உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் ஹிந்துஸ்தானி இசை பயில வைத்தார். பின் வங்கி பணியில் இருந்து விலகிய வாணி ஜெயராம், தும்னி, காஜல், பஜன் இசை நுணுக்கங்களை முழுமையாககற்றார். 1969ல் முதல் இசை நிகழ்ச்சியை மேடையில் நிகழ்த்தினார்.1971ல் 'குட்டி' படத்தில் 'போலே ரே பப்பி ஹரா' பாடலை பாடினார். முதல் பாடலே இவருக்கு புகழை தேடி தந்தது. தமிழில் 1973ல் 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தில் சங்கர் கணேஷ் இசையில் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜனோடு இணைந்து பாடிய 'ஓரிடம் உன்னிடம் நான் கேட்பது' பாடல் தமிழில் இவர் பாடி வெளிவந்த முதல் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன்இசையில் "தீர்க்க சுமங்கலி" படத்தில் இவர் பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல் இவரை தமிழ் திரையிசையில் வெகுவாக பேச வைத்தது. கடைசியாக 2019ல் 'எல்.கே.ஜி.,' படத்தில் 'தமிழ் ஆந்தம்' பாடலை பி.சுசிலா,எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பாடினார். இவரது எந்தப் பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் நயமும் இனிமையும் கைகோத்துக் கொண்டிருக்கும். பாடும் மொழிக்கு ஏற்ப அவரது உச்சரிப்பு, துல்லியமாக இருக்கும்.



10 ஆயிரம்




தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, அசாமி, துளு, வங்காளம் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். ஏராளமான பக்திப் பாடல்களும் தனி ஆல்பங்களாக இவரது குரலில் வெளி வந்திருக்கின்றன.யார் இசையில் அதிகம்தமிழில் அதிகமாக இளையராஜா இசையில் பாடியுள்ளார். சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், குன்னக்குடி வைத்தியநாதன், ரங்கா ராவ், ஏ.ஆர்.ரஹ்மான், ரமேஷ் விநாயகம், லியோன் ஜேம்ஸ் இசையிலும் பாடியுள்ளார்.



விருதுகள்



* பத்ம பூஷண் - 2023

* மூன்று தேசிய விருது (தமிழில் அபூர்வ ராகங்கள் படத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள்... - 1975, தெலுங்கில் சங்கராபரணம் படத்தில் மானஸ ஸஞ்சரரே... - 1980, ஸ்வாதிகிரணம் படத்தில் ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்...- 1991)

* நான்கு மாநில அரசு விருது (தமிழகம், ஆந்திரா, குஜராத், ஒடிசா)

* கலைமாமணி விருது

* மூன்று பிலிம்பேர் விருது

* தமிழக அரசின் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது



தமிழில் இவரது பாடல்களில் சில...




முத்தமிழில் பாட வந்தேன் - மேல் நாட்டு மருமகள்
மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - அபூர்வ ராகங்கள்

கேட்டால் கேட்ட வரம் - துர்கா தேவி

ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சல் ஆடுகிறது

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன் - ரோஜாப்பூ ரவிக்கைகாரி

அதோ வாராண்டி வாராண்டி - பொல்லாதவன்

தெய்வீக ராகம் - உல்லாச பறவைகள்

கவிதை கேளுங்கள் - புன்னகை மன்னன்

நாதமெனும் கோவிலிலே -- மன்மத லீலை

மச்சான பாருடி மச்சமுள்ள ஆளுடி - தங்க மகன்

எதுசுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் - வண்டிசோலை சின்ராசு

நினைவாலே சிலை செய்து -- அந்தமான் காதலி

நித்தம் நித்தம் நெல்லு சோறு - - முள்ளும் மலரும்

நானே நானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன்மேகமே மேகமே பால்நிலா தேயுதே - பாலைவனச்சோலை



துளிகள்




* திரையிசை பாடல்களில் அதிக மொழிகளில் (19) பாடியவர்.

* இவர் ஒரு சிறந்த ஓவியர். பல ஓவியங்களை வரைந்துள்ளார்.

* எந்த வகை இசை பாடலாக இருந்தாலும் அதன் ராக லட்சணங்கள் முழுவதையும் புரிந்து பாடுவார்.

* தமிழில் 'சிங்கிள் டேக் சிங்கர்' என பெயரெடுத்தவர்.

* முதல் ஹிந்தி வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் வசந்த் சேதாய், தமிழில் எம்.எஸ்.வி., மீது தன் வாழ்நாள் முழுக்க மரியாதை, பக்தி கொண்டவராக இருந்தார்.

* எண்ணெய், காரமான, குளிர்ச்சியான உணவுகளை அதிகம் எடுப்பதில்லை.

* என் நிஜப்பெயர் கலைவாணி. அதை ஒப்பிட்டு, 'உங்களுக்குப் பெயர் பொருத்தம் பரிபூரணமா அமைஞ்சிருக்கு'னு கவிஞர் கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

* வாணி ஜெயராமுக்கு, லதா மங்கேஷ்கர் புடவையுடன் மங்களகரமான சீர்வரிசைப் பொருள்களை வழங்கியுள்ளார்.எஸ்.பி.பி., யுடன் அசத்தல்தமிழில் எஸ்.பி.பி.,யுடன் இணைந்து அதிக பாடல் பாடினார். டி.எம்.சவுந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஜேசுதாஸ், பி.ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பல பாடல்களை பாடினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X