ஊட்டி:நீலகிரியில் சாலையின் நிலைக்கு ஏற்றவாறு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலகம் எச்சரித்துள்ளது.
நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட போக்குவரத்து கழக கிளைகளில், 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களுக்கு, 44 சீட் வசதி கொண்ட அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. சில வழித்தடத்தில் சாலை விரிவாக்கம் மேற்கொண்ட காரணத்தினால், 55, 57 சீட் வசதி கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
சில நெடுஞ்சாலைத்துறை சாலைகள் குறுகலாக இருந்தும் போக்குவரத்து துறையினர் அலட்சியத்துடன் பெரிய பஸ்களை இயக்கி வருகின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''குறுகலான சாலையில், 57 சீட் வசதி கொண்ட பஸ்களால் ஏற்படும் விபத்து அபாயத்தை போக்குவரத்து கழகம் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.