கோவை:இரட்டை ரயில்பாதை பணிகளால், ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை - திருமங்கலம் இடையேயான ரயில்பாதையில் இன்ஜினியரிங் மற்றும் இரட்டை ரயில்பாதை பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக, கோவை - மதுரை (எண்: 16721) இடையேயான தினசரி ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - கோவை(எண்: 16321) இடையேயான தினசரி ரயில், வரும் 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து விருதுநகர் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்; விருதுநகர் - கோவை இடையே இயக்கப்படாது எனவும், மறுமார்க்கத்தில், கோவை - நாகர்கோவில்(எண்: 16322), தினசரி ரயில், விருதுநகரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும்; கோவை - விருதுநகர் இடையே இயக்கப்படாது, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோவை - மதுரை( எண்:16721) இடையேயான தினசரி ரயில், வரும், 7 மற்றும், 8ம் தேதிகளில், திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்; மறுமார்க்கத்தில் மதுரை - கோவை(எண்:16722) தினசரி ரயில், திண்டுக்கலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.