திருப்பூர்:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு திருப்பூரில், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தலைவர் செல்வராஜை சந்தித்து அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி, அன்பரசன் உள்ளிட்டோர் பேசினர்.
அமைச்சர்களிடம், செல்வராஜ் அளித்த மனுவில், 'மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்ட வேண்டும். செங்குந்தர் இனத்துக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.