சிங்கம்புணரி,--சிங்கம்புணரியில் அறுவடையின் போது கிடைத்த வைக்கோல் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இத்தாலுகாவில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். பெரும்பாலானவை நல்ல விளைச்சல் கண்டு அறுவடை நடந்து வருகிறது.
இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்யப்பட்ட வயல்களில்வைக்கோல் அங்கேயே போடப்பட்டிருந்தது. வைக்கோல் கட்டும் இயந்திரங்கள் இப்பகுதிக்கு போதிய அளவில்வராததால் அவற்றின் வருகைக்காக விவசாயிகள் காத்திருந்தனர்.
இரு நாட்களாக பெய்த மழையால் வயலில் போடப்பட்டிருந்த வைக்கோல் நனைந்து பல இடங்களில் சகதிக்குள் புதைந்து விட்டது. விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்தாண்டு கால்நடைகளுக்கு வைக்கோல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.