காரைக்குடி,--குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நகரத்தார்கள் பழநி ஆண்டவர் அன்னதான மடத்தில்இருந்து புறப்பட்டு, குன்றக்குடி ரத வீதியில் காவடிகள் ஏந்தி வலம் வந்து மலை மீது ஏறி சண்முகநாதப் பெருமான் சன்னதியில் காவடியை செலுத்தினர்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி சண்முகநாதப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
தைப்பூசத்தையொட்டி சின்ன குன்றக்குடியில் மஞ்சுவிரட்டு நடந்தது.
300க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் தொழுவில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.